Watch "Lec Dem 24 | Academic Session 2024 | Sarva Samarasa Kirtanaigalum Sanmargak Kirtanaigalum" on YouTube
https://youtu.be/MVDy0pQ7cZs?si=xQchq6IUspjWvjcc
musicologist award this year
sister margaret
was attracted to music while young she enrolled at the queen mary's college and graduated in music from there in 1986 with three masters degrees to her credit of which the music degree is from the university of madras she completed her mfill and phd from the same university specializing in south indian classical music in music ஷி அக்னாலேஜஸ் அஸ் ஹர் குருஸ் சங்கீத கலா ஆச்சாரியா ஸ்ரீமதி சுகுணா வரதாச்சாரி காரைக்குடி டாக்டர் எஸ் சுப்பிரமணியம் அண்ட் பிது ஸ்ரீ ராஜேஸ்வரி பத்மநாபன் அண்ட் இன் மியூசிகாலஜி டாக்டர் எஸ் சீதா டாக்டர் என் ராமநாதன் டாக்டர் வேப்பாகா சுந்தரம் அண்ட் டாக்டர் அரிமளம் எஸ் பத்மநாபன் இன் பரதநாட்டியம் சிஸ்டர் ட்ரெயின்ட் அண்டர் சியாமலா a disciple of சங்கீத கலாநிதி டி பாலசரஸ்வதி she தென் went on to become a teacher serving at various institutions ஆப் தமிழ்நாடு அண்ட் இஸ் பிரசென்ட்லி தி பிரின்சிபல் அட் தி செயின்ட் ஜோசப் ஆர்ட் அண்ட் சயின்ஸ் காலேஜ் பார் விமன் சிவகங்கை டிஸ்ட்ரிக்ட் சிஸ்டர்
சர்வ சமய சமரச கீர்த்தனைகளும் சன்மார்க்க கீர்த்தனைகளும்
மேடையிலே அமர்ந்திருக்கக்கூடியவர்களுக்கும் அரங்கத்திலே அமர்ந்திருக்கிறவர்களுக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தை இந்த நேரத்திலே உரித்தாக்கிக் கொள்கின்றேன் அவர் சொன்னதுல கொஞ்சம் ஒரு மாற்றம் இருக்கு என்னன்னு சொன்னா நான் சின்ன வயசுல இருந்தே இசை கத்துக்கல மியூசிக் காலேஜ் குயின் மெரிஸ்ல படிக்க வரும்போதுதான் இசையவே கத்துக்க ஆரம்பிச்சேன் சாப்பா சாவே இந்த நேரத்துல என்னுடைய இந்த தமிழ் இசைக்கான ஆராய்ச்சிக்கெல்லாம் வித்திட்டவர் டாக்டர் சீதா தான் அவர்களுக்கு தான் இந்த கிரெடிட்ஸ் எல்லாம் போகணும்னு நான் இந்த நேரத்துல மனதார விரும்புறேன் உண்மையில சொல்லப்போனும்னு சொன்னா நான் வேற்று மதத்தைச் சார்ந்தவள் என்னுடைய உடையே அது உங்களுக்கு சொல்லி இருக்கும்னு நினைக்கிறேன் ஆனா நான் கல்லூரிக்கு வந்தபோதில இருந்து இதுவரைக்கும் என்னுடைய ஆசிரிய பெருமக்கள் ஆகட்டும் என்னோடு படித்தவர்கள் ஆகட்டும் என்னை ஒதுக்கி வச்சு பார்த்ததே கிடையாது எப்பொழுதுமே எனக்கு உதவி செய்யணும் ஏன்னா அப்பதான் நான் சாப்பாடு கத்துண்டேன் அதனால என்னை கைய பிடிச்சு எனக்கு இந்த நேரத்துல ஒரு சின்ன ஒரு விஷயம் சொல்லணும்னு தோணுது
மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு ஒரு போட்டி வச்சிருந்தாங்களாம் அந்த நேரத்துல அந்த குழந்தைகள் ஓடும்போது விசில் அடிச்ச உடனே ஓடணும் யார் முன்னாடி வராங்களோ அவங்களுக்கு பரிசு அப்படிங்கறது தெரியும் ஆனா ஒரு குழந்தை ஒரு சின்ன கல்லு தட்டி விழுந்துட்டது ஆனா இந்த குழந்தைங்க திரும்பி பார்த்து எல்லாருமா ஓடி வந்து அந்த குழந்தையை எழுப்பி கைய பிடிச்சு கூட்டிட்டு எல்லாரும் சேர்ந்து போய் அது பிரைஸ் வாங்கினதாக நமக்கு படிச்சிருக்கும் சோ அந்த நேரத்துல அதே மாதிரி என்னைய நான் வந்து விழுந்த குழந்தை என்னை கைய பிடிச்சு கூட்டிட்டு போனது என்னோடு படித்த என்னுடைய தோழிகள் மற்றும் என்னுடைய ஆசிரியர் பெருமக்களுக்கு இந்த நேரத்தில் என்னுடைய நன்றியை நான் உரித்தாக்கிக் கொள்கின்றேன்
முதல்ல வேதநாயகம் பிள்ளையை பத்தி கோபாலகிருஷ்ண பாரதி பாடின அந்த ஒரு பாடலோடு இதை தொடங்கினா நல்லா இருக்கும் அப்படின்னு நான் விரும்புறேன் தப்பு இருந்தா கொஞ்சம் தயவு செய்து என்னை மன்னிச்சுக்கோங்க ஏன்னா நான் வந்து மேடை பாடகைக்காக இல்ல எல்லாம் அட்மினிஸ்ட்ரேஷன்லயே இருக்கிறதுனால
இயல் இசையுடன் கலை எல்லாமும் ஆந்தா இயல் இசையுடன் கலை எல்லாமும் மாந்தாய் ஏழை மக்கள் உறவே இனிதென தேர்ந்தாய் ஏழை மக்கள் உறவே இனிதென தேர்ந்தாய் மயலரும் சமரச மார்க்கமும் சார்ந்தாய் மயலரும் சமரச மார்க்கமும் சார்ந்தாய் உயர் வேத நாயக மலரென நேந்தாய் உயர் வேத நாயக மலரென நேந்தாய் நீயே புருஷேறு உலகில் நிலைத்தது நின் பேரு நீதிபதி நீயே புருஷமே
சமயம் அப்படின்னா என்ன அப்படிங்கறது எனக்கு ஏன்னா சமய சமரச கீர்த்தனைகள் அப்படின்றது இருந்தது சமயம்னா என்ன அப்படின்னு தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்பட்டேன்
வேதாத்திரி மகரிஷி ரொம்ப அழகா இதை பத்தி சொல்றார் என்ன சொல்றாரு அப்படின்னா 65 லட்சம் ஆண்டுகள் மனித உயிர்கள் தோன்றி கோடி ஆண்டுகள் ஆயிடுச்சு இருந்தாலும் அகழ்வாய்வுல அவங்க சொல்றது என்னன்னு சொன்னாக்கா இந்த மனித இனம் இயற்கையை பார்த்து வியந்தது இந்த இயற்கையில் என்ன இது யார் இதெல்லாம் ஆட்டி வைக்கிறா இதெல்லாம் எங்கிருந்து பகல் இரவு இப்படி மழை இதெல்லாம் எப்படி முடியுது அப்படின்னு சொல்லி மனிதன் அதனை தெரிந்து கொள்ள ஆசைப்பட்டான் அப்படி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டதனுடைய விளைவு அதனுடைய விடையாக கிடைத்தது தான் நமக்கு நமக்கு இந்த சமயம் பத்தின தத்துவ ஞானம் கிடைக்கிறதை நம்ம பார்க்கிறோம் யார் ஆட்டி வைக்கிறா நான் யாரு அப்படின்னு சொல்லி இதுல ஆராய்ந்து பார்த்ததுல அவனுக்கு தெரிய வந்த விஷயம் என்னன்னு சொன்னா ஏதோ ஒரு சக்தி இருக்கு அந்த சக்தியில ஒரு பிராக்சன் தான் நம்ம எல்லாரும் அப்ப நாம எல்லாரும் எப்படி இருக்கணும்னு சொன்னா ஒருவரோடு ஒத்தும் உதவியும் வாழ்வதுதான் சம பிளஸ் இயம் சமயம் அப்படியே அப்படின்னு சொல்லி அவர் அழகா சொல்றாரு ச
ரி ஆன்மீகம் அப்படின்னா என்ன அப்படின்னு சொன்னா ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒரு கடமை இருக்கிறது அந்த தனி மனித கடமை இருக்கிறது அவன் வீட்ல இருக்கிறது போல சமுதாயத்தில் போய் இருக்க முடியாது அது ஒரு முறை இருக்கு அப்போ சமுதாயத்தில் ஒரு தனிப்பட்ட கடமை இருக்கிறது இந்த கடமைகளோடு இவன் வந்து எப்படி மற்றவர்களுக்கு உதவி செய்து மற்றவர்களோடு இணைந்து வாழுகிறான் இப்ப இந்த தனிமனித கடமை சமுதாய கடமையோடு இணைந்து வாழுகின்ற ஒரு நிலை ஒரு அறம் ஒரு ஒழுங்கு என்பதுதான் ஆன்மீகம் என்று ஆயிற்று
சரி இது ரெண்டுத்துக்கும் என்ன தொடர்பு இருக்கு அப்படின்னு பார்த்தோம்னு சொன்னா இந்த ஒழுங்குல நம்ம வாழ்ந்தால்தான் மீண்டுமாக அதே அந்த சக்தியோடு சென்று அடைய முடியும் என்பதுதான் தொடர்பு என்பதை வேதாத்திரி மகரிஷி ரொம்ப அழகா சொல்றார் இப்ப எதுக்காக
இதைப்பத்தி நம்ம பேசுறோம் அப்படின்னு சொன்னா என்னுடைய தலைப்பு அப்படிங்கறது எடுத்துட்டோம்னு சொன்னா
ராமலிங்க வள்ளலாருடைய சமரச சன்மார்க்க கீர்த்தனைகளும் வேதநாயகரின் சர்வ சமய சமரச கீர்த்தனைகளும்
இப்போ இந்த பாடல் இருக்கிற நான் பண்ணை பத்தியோ இல்ல தாளத்தை பத்தியோ இதெல்லாம் பத்தி நான் ஆராய்ச்சி பண்ணல
இதனுடைய இன்டெர்னல் எவிடன்சஸ்ல இருந்து நமக்கு என்ன கிடைக்குது அப்படின்னு நான் பார்த்தபோது ரெண்டு பாடல்களையும் நான் பார்த்தேன் இதை பார்க்கும்போது எனக்கு முதல்ல ஒரு அஞ்சு பாயிண்ட் மட்டும்தான் எனக்கு கொடுத்திருக்கிற இந்த குறைந்த நேரத்துல இதை மட்டும் தான் பத்தி பேச முடியும்னு நான் நினைக்கிறேன் இந்த முதல்ல பார்த்தீங்கன்னு சொன்னா
ரெண்டு பேருமே சமகாலத்தவங்க ரெண்டு பேருக்குமே வந்து தமிழ் மீது ஆர்வம் இருந்தது கவிதை இயற்றக்கூடிய ஆற்றல் இருந்தது மூன்றாவது பார்த்தீங்கன்னு சொன்னா பாடுகின்ற திறமையும் இவர்களுக்கு இருந்தது இனிமையான குரல் வளமும் இருந்தது அப்படிங்கறத பார்க்கிறோம்
இரண்டாவது பாயிண்ட்ல என்ன பார்க்கிறோம்னு சொன்னா ரெண்டு பேருமே இரு வேறுபட்ட அறத்தை வாழ்வாக்கியவர்கள் ஒருவர் இல்லறம் மற்றவர் துறவரம் இப்படி வாழ்ந்திருக்காங்க
மூன்றாவது பார்த்தோம்னு சொன்னா இவர்களுடைய கடவுளுடைய அனுபவம் என்பது எப்படி இருந்துச்சு அப்படிங்கறத பார்க்கலாம் நாலாவது இந்த சமய சமரச நோக்கு அப்படின்னு சொல்றோமே அது என்னவா இருக்க முடியும் அப்படிங்கறத பத்தி பார்க்கலாம் அஞ்சாவது பார்த்தீங்கன்னா இந்த அஞ்சு பாயிண்ட் மட்டும்தான் நான் பேசப்போறேன் இவங்களுக்கு சமுதாய அக்கறை இருந்தது ரெண்டு பேருக்குமே இருந்தது ஒருத்தர் அவதாரம் செய்தவர் இருந்தாலும் கூட இந்த அன்பு என்கிற நிலையிலிருந்து மாறுபட்டு அருளுக்கு எப்படி போய் அவர்கள் வாழ்ந்தார்கள் என்பதை பற்றி சிந்திக்கிறதுதான் இன்றைய நாளிலே ஒரு நமக்கு ஒரு ஒரு தெளிவாக இருக்க முடியும் அப்படின்றதை பார்க்கிறோம் அடுத்தது நம்முடைய கடவுள் அனுபவம் அப்படின்னா அதாவது கடவுளை பத்தி நம்ம எப்படி தெரிஞ்சுக்கிறோம் நம்ம சமயத்தை பத்தி எப்படி தெரிஞ்சுக்கிறோம் அப்படின்னு சொன்னா கம்பராமாயணத்துல பார்த்தீங்கன்னா ரொம்ப அழகா சொல்லுவாங்க
ராமர் இப்படி நடந்து போறாரு அவருடைய தோள் அழகை ஒருத்தி பார்த்துட்டே இருந்தா ஆ இப்படி மலை போல இருக்கிறதே அப்படின்னு சொல்லி அவ பார்த்துகிட்டே இருக்கும்போது அவர் கடந்து போயிட்டார் அப்போ தோள்ராமன் அப்படின்னு சொல்லி அவ சொல்லிட்டு இருந்தா இன்னொருத்தர் பார்த்தா ராமன் நடந்து போகிறான் அவனுடைய கால் அழகு பார்த்துட்டு அப்படியே மயங்கி நிக்கிறாள் உன் கால்தான் ராமனா அப்படின்னு ஏன்னா அதுக்குள்ள கடந்து போயிட்டார் ஆக இதை ரொம்ப அழகா கம்பர் சொல்லும்போது சொல்லுவார்
தோள் கண்டார் தோளே கண்டா
ர் தாள் கண்டார் தாளே கண்டார்
அப்படின்னு கடவுளுடைய அனுபவம் அப்படித்தான் இருக்கு யாருமே கடவுளை கண்டதில்லை கண்டவர் யாரும் விண்டதில்லை விண்டவர் யாரு
ம் கண்டதில்லை இதுதான் நம்ம நாள்ப்பட்டு பார்க்கிற ஒரு நிகழ்வாக இருக்கிறது சரி வள்ளலார் வள்ளலாரை பத்தி பார்த்தோம்னு சொன்னா 1823ல இவர் பிறந்திருக்கார் அக்டோபர் மாசம் ஐந்தாம் தேதி இதெல்லாம் தெரியும் அவருடைய வாழ்க்கை வரலாறு பத்தி எல்லாம் இப்ப நான் பேச போறதே இல்லை நமக்கு தெரியும் ஆனா ஒன்னு வந்து அவர் கல்லாமல் உணர்ந்தவர் சொல்லாமல் உணர்த்தியவர் அப்படிங்கறது நமக்கு தெரியும் இவர் 6000 பாடல்கள் எழுதி இருக்கார் அப்படின்னு பார்க்கிறோம் இந்த 6000 பாடல்களிலும் வந்து அவருடைய வாழ்க்கையினுடைய முழுவதுமே அகச்சான்றுகளாக நமக்கு கிடைச்சிருது அப்படிங்கறத பார்க்கிறோம் அவர் சொல்றாரு சின்ன வயசுலேயே என்னை கடவுள் ஆட்கொண்டு விட்டார் கடவுள் என்னை சின்ன வயதிலேயே ஆட்கொண்டு விட்டார்னு சொல்றாரு
உனக்கும் எனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ உனக்கும் எனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ சின்ன வயதில் என்னை ஆண்ட திறத்தை நினைக்குதே சின்ன சின்ன வயதில் என்னை ஆண்ட தீரத்தை நினைக்குதே சிந்தை நினைக்க கண்ணீர் பெருக்கி உடம்பை நனைக்குதே அப்பா நின்னை அன்றி என்னை அணைப்பாரும் இல்லை இல்லையே அந்தோ நின்னை அன்றி எங்கும் அருள்வார் இல்லையே
அப்படி கடவுள் தன்னைச் சின்ன வயதிலேயே ஆட்கொண்டு விட்டான் என்று சொல்லுகின்றவர் தனக்கு இந்த பாடல்கள் எல்லாம் எழுதுவதற்கு இறைவன் தான் அறிவுறுத்தினான் என்கிறதையும் அவரே சொல்றார்
வான் கொடுத்த மணிமன்றில் திருநடம் புரியும் வள்ளல் எல்லாம் வல்லவர் நன் மலர் எடுத்து என் உளத்தை தான் கொடுக்க நான் வாங்கித் தொடுக்கின்றேன்
அப்படின்னு சொல்றார் தர்க்க நூல்ல நம்ம வந்து இப்ப மீட்டர் வச்சு அளப்போம் லிட்டர் வச்சு அளப்போம் கிலோமீட்டர் அப்படி எல்லாம் சொல்லுவோம் இந்த மாதிரி ஒவ்வொன்றையும் அளப்பதற்கு ஒரு பெயர்கள் இருக்கு உண்மையை அளப்பதற்கு என்ன பெயர் அப்படின்னு பார்த்தா தர்க்க நூல்ல சொல்றாங்க பிரமாணம் அப்படிங்கறது சொல்றாங்க இது மூன்று பிரமாணம் தான் இருக்கு
ஒன்று காட்சி பிரமாணம் இரண்டாவது அனுமான பிரமாணம் மூன்றாவது ஆகம பிரமாணம்
காட்சி பிரமாணம் நமக்கு தெரியும் நம்ம பார்த்தோம்னா இப்ப இது நடந்தது அப்படிங்கறத நம்ம பார்த்துட்டோம் எங்கேயோ புகை வருதுன்னா அங்க நெருப்பு இருக்கு அப்படிங்கறதும் நமக்கு தெரியும்
ஆகம பிரமாணம் அப்படின்னா என்னன்னு சொன்னா இயற்கையோடு அதாவது இந்த பிரபஞ்சம் இந்த இயற்கை இதுதான் கடவுள் ஏதோ ஒரு சக்தி இருக்குன்னு சொல்றோம் இல்லையா இந்த சக்தியோ இணைகின்ற ஒரு இணைப்பிலே இறைவன் தனக்கு அறிவுறுத்துகிறார் அதனாலதான் பார்த்தீங்கன்னு சொன்னா அறநூலாகிய திருக்குறள் வந்து இன்றளவுக்கும் நமக்கு அது இன்றைய நாளினுடைய வாழ்க்கையைப் பற்றி சொல்லக்கூடிய அறிவுறுத்தக்கூடிய ஒரு அறநூலாக இன்றளவும் விளங்குகிறது என்றால் என்னைக்கும் 2000 வருஷத்துக்கு முன்னாடி எழுதின இந்த நூல்ல எப்படி இன்றைய நாளுக்கு இந்த வாழ்க்கைக்கு எப்படி பொருத்தமான செய்திகள் இருக்கிறது அப்படின்னு சொன்னா இதெல்லாம் இறைவன் அறிவுறுத்தியது அப்படிங்கறது நமக்கு நல்லா தெரியுது ஆக இந்த ஆகமப் பிரமாணத்தின் வழியாக அவர் இறைவனோடு ஏதோ ஒரு அந்த சக்தியோடு ஒரு தொடர்பில் இருந்ததால் அந்த சக்தி தனக்கு அறிவுறுத்தியது என்பதை அவரை சொல்றதை நாம பார்க்கிறோம்
இவர் ஒரு நூலாசிரியராக இருக்கிறார் உரையாசிரியராக இருக்கிறார் பதிப்பாசிரியராக இருக்கிறார் பத்திரிகை ஆசிரியராக இருந்திருக்கிறார் சித்த மருத்துவர் அருட்கவிஞர் சித்துக்கள் அறிந்தவர் ரசவாதம் தெரிந்தவர் இதெல்லாம் தெரிஞ்சு இப்படி பன்முகத்தன்மை கொண்டவராக வள்ளல் பெருமான் அவதரித்திருக்கிறார் இருந்தாலும் கூட அவருக்கு வந்து இசை பா வகைகள்ல என்னென்ன பா வகைகள் எத்தனை பா வகைகள் இருக்கிறதோ அத்தனையிலும் அவர் பாடல் இயற்றி இருக்கிறதை நாம பார்க்கிறோம் அவருக்கு வந்து கிண்ணரத்தை ஒத்த சாரீரம் இருந்தது அப்படின்னு சொல்லி அவ்வளவு அழகா உச்ச ஸ்தாயில் பாடக்கூடிய இனிமையான குரல் வளம் இருந்தது அப்படின்றதையும் அவர் காலத்துல வாழ்ந்தவர்கள் நூல்ல பதிவு செய்திருக்கிறது நம்ம பார்க்கிறோம்
அடுத்ததாக வேதநாயகம் பிள்ளை இது ஃபர்ஸ்ட் பாயிண்ட் தான் நான் இப்ப பேசிட்டு இருக்கேன் வேதநாயகம் பிள்ளை வந்து ஒரு மூணு வருஷம் சின்ன இளையவர் அவருக்கு 1826ல பிறந்தார் இருக்காரு அவரும் அக்டோபர் மாசம் 14 ஆம் தேதி பிறந்திருக்காரு இவர் திருச்சி குளத்தூரைச் சார்ந்தவர் 12 வயதுக்குள்ளாக ஏன்னா அப்படின்னு சொன்னா அவருடைய பெற்றோர்கள் படித்தவர்களாகவும் நல்ல பெரிய பணக்கார குடும்பத்தைச் சார்ந்தவராகவும் இருந்த காலம் இருந்ததுனால அதனால அவருக்கு வந்து நூலை படிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கு 12 வயசுலயே எல்லா தமிழ் நூல்களையும் அவர் கற்றுவிட்டதாக அவர் சொல்றாரு அதுக்கப்புறம் வந்து 22 வயசுல அவருக்கு வந்து கோர்ட்ல ரெக்கார்ட் கீப்பர் வேலை கிடைக்குது அவர் டூ இயர்ஸ் அங்க செய்றாரு அங்கேயும் அவர் சும்மா இல்ல இந்த வேலையை பார்த்தோம் நம்ம ஜாலியா இருந்தோம் அப்படின்னு இல்லாம அங்கு இருந்த தியாகப்பிள்ளை அப்படிங்கிறவர் அவர் தமிழும் ஆங்கிலமும் அறிந்தவர் அவர்கிட்ட போய் ஆங்கிலத்தை நன்றாக கற்றுக்கொண்டு மொழிபெயர்ப்பாளராக ஒரு பதவி உயர்வு அவருக்கு கிடைக்கிறது அதுக்கப்புறம் வந்து முனுசிப் வந்து தரங்கம்பாடிக்கு முறைமன்ற தலைவராக டிரான்ஸ்பர் ஆகி போறாரு அங்கிருந்து போயிட்டு நீதிபதியாக சீர்காழிக்கு மாற்றலாகி வருகிறார் அதுக்கப்புறம் மாயூரத்துக்கு போறாங்க அது கடை கடைசி கடைசி வரைக்கும் தன்னுடைய வாழ்நாள் வரைக்கும் அங்கதான் அவர் இருந்ததாக நம்ம பார்க்கிறோம்
சுதானந்த பாரதி வந்து வேதநாயகம் பிள்ளையை பார்த்து சொல்றாரு அவர் கீதா நாயகம் மேதை நாயகம் நீதி நாயகம் அப்படின்னு சொல்லி அவரை பாராட்டுறார் அதிலிருந்து அவருக்கு நல்லா பாடல்கள் பாட முடிஞ்சது அப்படின்றது தெரியும் அவர் வந்து ஒரு 13 நூல்களை ஏற்றிருக்கிறார் நீதிநூல் பெண்மதி மாலை பிரதாப முதலியார் சரித்திரம் சுகுணசுந்தரி சரித்திரம் தேவமாதா அந்தாதி திருவருள் அந்தாதி திருவருள் மாலை சத்திய வேத கீர்த்தனை சர்வ சமய சமரச கீர்த்தனைகள் தேவ தோத்திர மாலை
இந்த மாதிரி 13 நூல் படைத்திருக்கிறார் காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்றார் போல பல பாடல்களை இயற்றி ஏற்றித் தந்திருக்கிறதை நம்ம பார்க்கிறோம் அதுக்கப்புறம் அவருக்கு இயல்பாகவே ஒரு நகைச்சுவை உணர்வு இருந்ததுனால நலுங்கு பாடல்கள் சோபான பாடல்கள் இதெல்லாம் அவர் அதிகமா ஏற்றித் தந்திருக்கிறதை நம்ம பார்க்கிறோம் இரண்டாவது பாயிண்ட் போனோம்னு சொன்னா வள்ளல் பெருமானுடைய துறவரம் நம்ம அவருடைய திருக்குறள்ல பார்த்தோம்னு சொன்னாக்க ரெண்டே ரெண்டு அறத்தை பத்திதான் பேசுறாங்க அறநூல்தான் அது ரெண்டு அறம் தான் பேசுறாங்க
ஒன்று இல்லறம் மற்றது துறவரம் பொதுவாகவே நம்மளுடைய சமூகத்துல இந்த சமூகத்துல எப்படி பார்க்கிறோம்னு சொன்னாக்க இல்லறத்துல இருந்து தான் நம்ம துறவரத்தை போய் சென்றடைய முடியும் ஏன் அப்படின்னு பார்த்தோம்னு சொன்னாக்க இல்லறத்துல நமக்கு வேண்டியவர்களோட நமக்கு என்னுடைய கணவர் என்னுடைய மனைவி என்னுடைய குழந்தைகள் என்னுடைய உற்றார் உறவினர் இவர்களுக்கு நாம் அன்பு காட்டுவோம் ஆனா மெல்ல மெல்ல அது வளர்ந்து சமுதாயத்திற்கு அந்த அன்பு வழிந்தோடும்போது அது அருளாக மாறுகிறது
அதுதான் துறவரத்துல இல்லறத்தி
ல் அன்பும் துறவரத்துல அருளும் என்று வள்ளுவர் பெருமான் குறிப்பிட்டிருக்கிறதை நம்ம பார்க்கிறோம்
வள்ளலார் என்ன செஞ்சாருன்னு சொன்னா சின்ன வயசுல சம்பந்தரை தான் குருவாக கொண்டிருந்தார் அதுமட்டும் இல்லாம அவருக்கு திருவாசகத்து மேல அவ்வளவு ஒரு ஆசை ஏன்னு கேட்டா அதை யார் பாடினாலும் அவருக்கு கண்ணுல இருந்து தண்ணியா கொட்டும் சில சமயங்களில் மூர்ச்சித்து விழுந்து விடுவதாக கூட எழுதி இருக்கிறதை நம்ம பார்க்கிறோம் சுந்தரர் வந்து சுந்தரர் அதாவது இவர் எல்லாரையும் படிச்சிருக்கிறார் படிச்சிருந்தாலும் கூட சுந்தரரைப் பற்றி சொல்லும்பொழுது அவர் என்ன சொல்றாரு
இந்த 63 நாயன்மார்களுக்கும் நான் அடியேன் அப்படின்னு சொன்னதுக்கு அப்புறம் என்ன சொல்லுவாருன்னா அப்பாலும் அடி சார்ந்த அடியாருக்கும் அடியேன் அப்படின்னு சொல்றாரு அப்பாலும் அப்படின்னா இந்த சமயத்தில் இருக்கிற அடியார்களுக்கு மட்டுமல்ல மற்ற சமயத்திலேயும் கடவுளை வழிபட்டுக் கொண்டிருக்கின்ற அத்துனை அடியார்களுக்கும் நான் அடியேன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு சுந்தரர் இருந்தாரு அந்த சுந்தரரை அடியோற்றி தான் இவரும் சன்மார்க்கம் அப்படிங்கிற ஒரு நிலைக்கு அவர் போனதை நாம பார்க்கிறோம் திருமூலர் இவர் படிச்சிருக்கிறார்
திருமூலர் சொல்லுகிறார்
என்னை நன்றாய் இறைவன் செய்தனன்
தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாரே
அப்படின்னு சொல்லி அவர் சொல்றது போல இவரும் தான் எதற்காக இந்த அவதாரத்தை எடுத்தோம் என்பதற்குரிய காரணத்தை அவரை பதில் செய்கிறார்
அகத்தே கருத்து புறத்து வெளுத்திருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்தி சன்மார்க்க சங்கத்து அடைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுவதற்கென்றே எனை இந்த
உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே
அப்படின்னு சொல்றாரு அதாவது இந்த சன்மார்க்க சங்கத்துல எல்லாரையும் சேர்த்து இந்த உலகத்திலேயே அந்த உலகத்தின் இன்பத்தை அவர்கள் அடைந்திட வேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் என்ன இங்க அவதாரம் செய்ய வைத்திருக்கிறார் என்று சொல்கிறார்
ஊரு நடிகள் 1971ல வள்ளலாருடைய வாழ்க்கை வரலாற்றை ஒரு நூலாக வெளியிட்டார் அந்த சமயத்துல தினமணி அப்படிங்கிற ஒரு நாளிதழ் இவரைப் பற்றி ரொம்ப அழகாக மூன்று கருத்துக்களை அவங்க பதிவு செய்திருந்தாங்க என்னன்னு சொன்னா இவர் வள்ளலார் வள்ளல் பெருமான் சமயத் துறையில் மட்டுமின்றி சமூக வாழ்க்கையிலும் ஒரு மாறுதலை ஏற்படுத்தியவர் இரண்டாவது ஜாதி மத வேறுபாடுகளை கடந்து அந்த சமரச சன்மார்க்க புது நெறியை உருவாக்கியவர் மூன்றாவது அன்பு நெறியை வாழ்ந்து பரவச் செய்தவர் அப்படின்னு சொன்னார் இது ரொம்ப பொருத்தமானதாக இருந்தது அதனாலதான் இதை உங்களோடு பகிர்ந்து கொள்ளனும்னு ஆசைப்பட்டேன்
வேதநாயகர் இல்லறம் இல்லறத்தை இவர் மிக மிகச் சிறப்பாக வாழ்ந்தார் என்று தான் சொல்லணும் ஏன்னா ஒருத்தர் ஒரு ஒவ்வொரு மனைவியும் இறக்க இறக்க இவருக்கு திருமணம் செய்துட்டே இருந்தாங்க அஞ்சு மனைவிகள் இவருக்கு ஆனா அவர் என்ன சொல்றாரு
நாளும் சாரமில்லா சம்சார கோலாகாலம் சாரும் எனக்கு என்றும் தீரா வியாகுலம் வீரனே நீ அறிவாய் என் பலாபலம்
அப்படிங்கிறார் என்ன நான் இந்த மாதிரி கல்யாணம் இந்த சம்சாரத்தில் உழன்று உழன்று துன்பத்தை தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் ஆனா உனக்கு தெரியும் என்னுடைய பலம் என்ன என்னுடைய வீக்னஸ் என்னங்கிறது உனக்கு நல்லாவே தெரியும் நீதான் என்னை பார்த்துக்கணும் அப்படின்னு டோட்டலி சரண்டர் இவருக்கு வந்து இவர் நான் இதுக்காக நான் வந்தேன் அப்படின்னு எல்லாம் சொல்ற அளவுக்கு இவர் பெரிய ஆள் இல்லை இருந்தாலும் கடவுள் முன்னாடி தன்னை மிகவும் தாழ்த்திக் கொள்ளுகிற ஒரு மனிதனாகத்தான் இவர் தன்னுடைய பாடல்கள்ல பதிவு செய்திருக்கிறதை நம்ம பார்க்கிறோம் இவருடைய நண்பர்கள் பார்த்தீங்கன்னு சொன்னா யாருமே இவருடைய சமயத்தைச் சார்ந்தவர்கள் அல்ல இவர் வந்து வேற்று சமயத்தவர்களிடம் அதாவது சமயம் அப்படிங்கறதை விட்டுட்டு மனிதம் மனித நேயம் என்பதை மட்டும் பார்த்து அவர்களோடு உறவு கொண்டிருந்ததை நம்ம பார்க்க முடியுது
புலவர் பெரும் புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
திருவாவடுதுறை ஆதீன தலைவர் ஸ்ரீலஸ் சுப்பிரமணிய தேசிகர்
சிவை சாமோ தாமோதரப்பிள்ளை
கோபாலகிருஷ்ண பாரதியார் வள்ளலார்
சென்னை சுப்பராய செட்டியார் இவங்க எல்லாரும் தான் இவருடைய நண்பர்களாக இருந்ததை பார்க்கிறோம்
குளத்தூர் கோவையை மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் பாடி இருக்கிறாங்க இப்ப நீயே புருஷேறுன்னு அதாவது மனிதனை பாடாத தன்னுடைய வாயால் இறைவனை மட்டுமே பாடுவேன் என்று இருந்த கோபாலகிருஷ்ண பாரதியார் நீயே புருஷன் மேறுன்னு சொல்லி வேதநாயகம் பிள்ளையை பத்தி பாடி இருக்காரு வள்ளலாருடைய வள்ளலார் கோபாலகிருஷ்ணன் வேதநாயகம் பிள்ளையருடைய நீதி நூலுக்கு ஒரு சாற்றுக் கவி ஒன்று வழங்கி இருக்கிறார் இவர் வந்து என் சரித்திரத்துல உவே சுவாமிநாத ஐயர் வந்து ரொம்ப அழகா இவரை பத்தி பேசிட்டு போறார் எனக்கு அதுல படிக்கும்போது ஏன்னா கட்டாயம் இவர் பேசி இருப்பார் நான் ஏற்கனவே என் சரித்திரம் படிச்சிருக்கேன் அப்ப பார்க்கும்போது இவர் என்ன சொல்றாரு இப்படிப்பட்ட ஒரு பெரிய ஆளெல்லாம் நம்ம வந்து பாக்குறதுக்கும் பேசுறதுக்கும் அவங்களோட இருக்கிறதுக்கும் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சதே அப்படின்னு சொல்லி அவர் பெருமைப்படுறாரு ஓவே சுவாமி சுவாமிநாத ஐயர் என்னன்னு சொன்னா இவர்கள் அந்த காலத்துல எல்லாம் பாட்டுல தான் எழுதி அனுப்பி ஒரு கடிதம் என்கிறது இன்னைக்கு உரைநடையாக இருப்பது போல இல்ல ஒரு பாட்டுலயே எழுதி அனுப்பி இருக்கிறதை பார்க்கிறோம் அப்படி எழுதி அனுப்பின பாடல்களை எல்லாம் உவே சுவாமிநாத ஐயர் தான் நமக்கு ஆதீன தலைவருக்கு படிச்சு காட்டுற ஒரு வழக்கம் பாடி காட்டுறது வழக்கம் அப்படியாக இருந்தது அப்போ இது எந்த அளவுக்கு இருந்ததுன்னு சொன்னா இந்த பாடல்களை எந்த அளவுக்கு அந்த ஆதீன தலைவர் ரசித்திருக்கிறார் என்று சொன்னால் அவரைப் பார்க்க வருகின்ற அந்த கனவான்களிடம் அந்த வேதநாயகன் பிள்ளை எழுதி அனுப்பினார்ல அந்த இதை பாட்டை எடுத்து படிச்சு காட்டுங்க அப்படின்னு சொல்ல அங்க வந்திருக்கிற பெரிய கனவான்கள் எல்லாரும் கூட சொல்லுவாங்களாம் ஒரு கிறிஸ்தவ கனவான் சைவ மடத்து தலைவரை இவ்வளவு தூரம் பாராட்டி இருக்கிறது அப்படிங்கறது ஒரு பெருமைப்பட விஷயமாக இருந்தது அந்த காலத்துல இதெல்லாம் ஒரு ரெஸ்ட்ரிக்ஷன் இருந்திருக்கலாம் போல ஆனா இதெல்லாம் மீறி இவர்கள் அன்போடு இருந்திருக்கிறதை நாம பார்க்க முடியுது வள்ளலாருடைய கடவுள் அனுபவம் தேர்ட் பாயிண்ட்டுக்கு வந்துட்டோம்
கடவுள் அனுபவம் என்பது தனி மனிதனுடைய அனுபவம் யாராலயும் இது என்னோட அனுபவம் இது உனக்கும் அப்படித்தான் இருக்கணும்ன்றதெல்லாம் யாரும் பேச முடியாது ஆனால் கடவுளை அன்பு செய்வதற்கு ரெண்டு வழி இருக்குன்னு சொல்றாங்க ஒன்று நூலறிவு மற்றது அனுபவ அறிவு தன்னை தரிசிக்க தெரிஞ்சால் மட்டும்தான் கடவுளை ஆன்ம தரிசனம் கிடைக்கும் அவ்வளவுதான் தன்னை தரிசிக்க வேண்டும் அந்த தரிசனம் இவருக்கு இருந்தது வள்ளலாருக்கு ஏன் அப்படின்னு சொன்னா கந்த கூட்டத்தில் போய் இருந்தார் சாப்பாடு இல்லை பசி தனித்திருந்தார் விழித்திருந்தார் பசித்திருந்தார் அப்போது இறைவனை அவர் கண்டுகொண்டார் அது ஒன்னு தான் நம்ம பார்க்க முடியுது அப்போ இவர் என்ன சொல்றாரு எழுதும் கால் கோல் காணா கண் கண் போல அப்படின்னு நம்ம வள்ளுவர் சொல்றது போல இவர் வீட்ல மாடியில உட்கார்ந்து இருக்கார் அண்ணன் திருப்பி கூப்பிட்டதுக்கு அப்புறம் அந்த கதைக்கு எல்லாம் நான் போகல அந்த கண்ணாடி முன்னாடி இவர் உட்கார்ந்து இருக்கார் விளக்கு இருக்கு முன்னாடி ஆனா கண்ணாடியில தெரிஞ்சது இவர் இல்ல விளக்கு இல்ல ஆனா தனக்குள் இருக்கிற அந்த முருகப்பெருமானை அவர் தரிசிக்க முடிந்தது அந்த அளவுக்கு அவருடைய ஆன்மீகம் வளர்ந்திருந்ததை நம்ம பார்க்கலாம் எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும் அக்கோலத்து அவ்வுருவே ஆம் அப்படின்னு சொல்லி அற்புத திருவந்தாதையில காரைக்கால் அம்மையார் சொல்றாங்க அப்போ ராமகிருஷ்ண பரமஹம்சர் இருக்கார் இல்லையா அவர் வந்து தியானம் பண்ணும்போது எது தியானம் பண்றோமோ அதுவாவே நம்ம ஆயிடுவோம் அப்படிங்கறதுக்கு இது ஒரு பெரிய ஒரு உதாரணமா சொல்லலாம் இன்னைக்கு ஆஞ்சநேயர் ஜெயந்தின்னு பாடுனாங்க ஆஞ்சநேயரை பத்தி இவரு தியானம் பண்ண பண்ண கீழேயே உட்கார்ந்து இருக்க மாட்டார் மரத்து மேல ஏறி உட்கார்ந்துட்டு இருப்பாருன்னு அவருடைய வரலாற்று நிகழ்வுகளை நம்ம படிக்கிறது பார்க்கிறோம் அம்பாளை பத்தி தியானம் பண்ணா அவருக்கு மார்பகங்கள் எல்லாம் வளர்ந்திருந்தது அப்படி எல்லாம் குறிப்புகள் இருக்கு நானா கதை கட்டி எல்லாம் சொல்லல எனக்கு ஒரு தேடல் இருந்ததுனால நான் இப்படி எல்லா நூல்களையும் தேடி தேடி வாசிக்கிறது உண்டு அப்படி பார்க்கும்போது நம்ம எப்படி நினைக்கிறோமோ அப்படித்தான் கடவுள் நமக்கு அந்த ஆன்மீகம் தான் அவர்கிட்ட இருந்தது அப்ப அவர் சொல்றாரு
பால் வகை ஆணோ பெண் கோலோ எருமை பாலதோ பால் உரோ அதுவோ இதுவோ இயல்வகை ஒன்றோ இரண்டதோ அனாதியோ இயற்கையோ ஆதியின் இயல்போ
அதாவது அது என்ன சொல்றாருன்னா இறைவன் ஆணோ பெண்ணோ அல்லது அலியோ ஒன்றோ இரண்டோ ஆதியோ அனாதியோ எனக்கு அதெல்லாம் பத்தி தெரியாது அவன் என் உள்ளத்திலே வந்து வாழுகிறான் அது எனக்கு கொடுத்த கிடைத்த ஒரு பெரும் பாக்கியம் என்று அவரை பெருசா பாடிச் சொல்றார் மனித பிறவியின் வழியாக ஒரு தெய்வீக நிலையை அடைய முடியும் என்பதற்கு வள்ளலார் ஒரு பெரிய சான்றாக இருக்கிறார் 19 ஆம் நூற்றாண்டுல பார்த்தீங்கன்னா 19 இந்த 19 ஆம் நூற்றாண்டுல ஒருத்தர் எழுதி இருக்காரு திருவாசகத்தினுடைய மறுபதிப்பு இருந்துச்சுன்னு சொன்னா அதுதான் அந்த வள்ளலாருடைய பாடல்கள் அந்த அளவுக்கு அந்த உருக்கம் அதாவது ஆறாம் திருமுறையில பார்த்தீங்கன்னா அவர் வந்து முதல்ல வந்து வழிபட்டது எல்லாமே வந்து உருவ வழிபாடு இருந்துச்சு ஆனா இப்ப சைவத்துல வந்து ரெண்டு விதமான வழிபாடுகள் இருக்கு அதாவது ஒன்று தடத்த நிலை இன்னொன்னு சொரூப நிலை அப்படின்னு சொல்லுவாங்க சொரூப நிலை அப்படின்னு சொன்னா நம்முடைய மனதுக்கு நம்முடைய கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு நிலையில இருக்கிற ஒன்று தடத்து நிலை அப்படின்னு சொன்னா
முதல்ல உருவ வழிபாடு
அடுத்தது அருவுருவ வழிபாடு அடுத்தது அருவ வழிபாடு
இந்த மூன்று வகையான வழிபாடு இருக்கு உருவ வழிபாடுன்னா நடராஜருடைய சிலை இருக்கிறது அப்ப அருவுருவம் அப்படின்னு சொன்னா லிங்கத்தை வழிபடுவது அப்புறம் அருவம்னு சொன்னாக்கா எதுவுமே இல்லாம ஜோதியை வழிபடுகின்ற ஒரு நிலை
அப்படித்தான் இவருடைய அந்த ஒரு நிலைக்கு போனதுக்கு அப்புறம் அவருடைய ஆறாம் திருமுறைகள் எல்லாமே பார்த்தீங்கன்னு சொன்னாக்க திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கு உருகாதார் மாதிரி இந்த இவருடைய ஆறாம் திருமுறைக்கு நிச்சயமாக உருகித்தான் ஆகணும் அப்படியான ஒரு பாடல்கள் எல்லாம் இவர் எழுதி இருக்கிறதை நம்ம பார்க்கிறோம் இப்ப
புனைந்துரையேன் பொய் புகழேன் சத்தியம் சொல்கின்றேன் இதெல்லாம் தெரியும் நீங்க கேட்டிருக்கிறீங்க போன ஆண்டும் கேட்டிருக்கிறீங்க மரணமில்லா பெருவாழ்வை வாழ்ந்திடலாம் இதுல பார்த்தீங்கன்னா நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து அன்பே நிறைந்து நிறைந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து அப்படியே அடுக்கு மொழியா போவார் இல்ல இது அடுக்கு மொழி இல்ல வாரியார் ரொம்ப அழகா இதை பத்தி சொன்னார் எனக்கு இது ரொம்ப புடிச்சிருந்தது அதனால உங்களோட பகிர்ந்துக்கணும்னு நான் ஆசைப்படுறேன் நினைந்து நினைந்து அப்படின்னு சொன்னா அவர் தத்துவ விளக்கம் கொடுக்கிறார் நினைந்துன்னா என்னுடைய சிறுமையை நினைந்து அடுத்த இறைவனுடைய பெருமையை நினைந்து உணர்ந்து அப்படின்னு சொன்னா அப்புறம் ஞானம் ஞானம் ரெண்டு ஞானம் இருக்கு இல்லையா அதாவது உணர்ந்து சாத்திரங்களால் நான் உணர்வது அடுத்தது என்னுடைய அனுபவத்தால் இறைவனை உணர்வது அப்படின்னு சொல்றார் அன்பே நிறைந்து அப்படின்னு சொன்னா ரெண்டு விதமான நிற்காமியம் காமியம்னு இருக்கு இல்லையா ஏதாவது பயன் எனக்கு கிடைக்கும்னு நான் காட்டுகிற அன்பு இல்லாட்டி பயன் இல்லாமல் காட்டுகிற அன்பு இதுதான் பத்தி சொல்றாரு அன்பே நிறைந்தன ஊற்றிழும் கண்ணீர் அதனால் நனைந்து நனைந்துன்றதுக்கு கூட ஒரு விஷயம் சொல்றார் என்னன்னா உடம்பு நனையுதுன்னு சொன்னா நமக்கு சில நேரம் அப்படியே வயித்த பிசைஞ்சுண்டு அப்படியே இங்கே இருந்து அழுகை வரும் அந்த அழுகை இருக்கே அது துன்பத்தின் காரணமாக வரக்கூடியது கண்ணு ஓரத்திலிருந்து வர்றது ஆனந்த கண்ணீராக வரும் அப்படின்னு சொல்லி சொல்றாரு வனைந்து வனைந்து பாடலினால் வளைவது இசையினால் வனைவது இப்படி எல்லாம் கடவுளை இவர் உணர்ந்து உணர்ந்து பாடி இருக்கிறவர் மனிதர் ஒளி உடம்பை பெற்றிருக்கிறது அப்படிங்கறது இதுவரை கேட்டிராத கண்டிராத ஒரு நிலைப்பாடு ஆனா இவர் என்ன சொல்றாரு
நான் செய்த புண்ணியம் என்னுரைக்கேன் ஊன் செய்த என் தேகம் ஒளி வடிவாக நின்று ஓங்குகின்றேனே
அப்படின்னு சொல்றார் அவர் புகைப்படத்துக்குள்ள அடங்குனதே இல்லை நம்ம பார்க்க வள்ளலாருடைய படம் எல்லாம் அங்க யாரோ அடைஞ்சது தான் தவிர புகைப்படம் எடுத்து போட்டதே இல்லை அந்த அளவுக்கு அவர் ஆன்மீகத்தில் உயர்ந்திருந்த ஒரு நிலையை நம்ம பார்க்கிறோம்
அடுத்ததாக வேதநாயகம் பிள்ளை அவருக்கு வந்து ரொம்ப அதிகமான அனுபவம்னு சொல்ல முடியாது ஆனா இவருக்கு தமிழ் தெரியும் ஆன்மீகம் இருந்தது இசையும் இருந்தது இது மூணையும் பிரிச்சே பார்க்க முடியாது யார் யாருக்கெல்லாம் நல்லா பாட முடியுமோ கோயில்ல உட்கார்ந்தா அதை பாடும்போதோ இல்ல மற்றவங்க பாடும்போதோ கேட்டா நமக்கு கண்ணுல இருந்து கண்ணீர் வரும் அது ஆன்மீகம் இல்லையா அப்போ தமிழ் மொழி தெரிஞ்சிருக்கணும் அந்த மொழியில நான் எந்த மொழின்னு நான் சொல்லல தமிழையும் இதை பிரிச்சு பார்க்க முடியாத ஒரு நிலையில இருக்கிறோம்னு சொல்றோம் இவர் வந்து தமிழ் நூல்கள் எழுதி இருக்கிறார் தமிழ் நூல்களை படிச்சிருக்கிறார் ஆக ஆன்மீகம் குறித்த தெளிவு இவர்கிட்ட இருந்துச்சு பார்க்கிறோம் வள்ளலாருடைய பாடல்கள்ல மனசை பறிக்கொடுத்திருந்தார் அதனால ஆண் அல்ல பெண் அல்ல ஐம்பூது சுடர் அல்ல அரி அயன் சிவன் அல்ல அதுவும் அல்ல இதுவ அல்ல அப்படின்னு அவரும் இவரை பார்த்தே ஒரு பாடல் இறைவா நீ இனத்தைக் கடந்து இயற்கையைக் கடந்து பல்வேறு பெயர்களைக் கடந்து சூரியகாந்தி மலரை ஈர்க்கக்கூடிய ஒளி வடிவானவனாய் திகழ்கின்றாய் உன்னை காணவே நான் காதல் கொண்டேன் ஆனால் நீ எனக்கு காட்சி கொடுக்கவே இல்லை அதை பதிவு செய்றார் காட்சி எனக்கு கொடாமல் இருக்கின்ற காரணம் ஏதையா அப்படின்னு கேட்கிறார் ஏன்னா நீ காட்சி கொடுத்துட்டு நான் உன்னை பார்த்துட்டேன்னு சொன்னா என்னுடைய தோஷம் எல்லாம் போயி என்னுடைய தேகமும் திவ்ய தேஜுமயம் ஆயிடுமோ அப்படியே வள்ளலார் மாதிரி எனக்கும் அந்த ஒளிவிடம் கிடைச்சிருமோ அப்படின்றதெல்லாம் ஒரு ஏக்கத்தை நாம பார்க்கிறோம் அப்புறம் சொல்றார் சொல்றாரு நீ இந்த தில்லுமுள்ளுத்தனம் எல்லாம் பள்ளி மேல வந்தரலாம்னு நினைக்க முடியாது ரெண்டே ரெண்டு விஷயம் யூ ஹவ் டு சரண்டர் யுவர்செல்ப் டோட்டலி இந்த மும்மலங்களையும் நீ அகற்ற வேண்டும் உய்யும் வகை இது நெஞ்சமே இல்ல பேசி பேசிட்டு உய்யும் வகை இது நெஞ்சமே வேறு செய்யும் உபாயங்கள் வஞ்சமே உய்யும் வகை இது நெஞ்சமே மையல் தரும் உன் மலங்களை நீக்க மையல் தருமும் மலங்களை நீக்க ஐயன் பொற்பாதத்திற்கு ஆளாக்க ஐயன் பொற்பாதத்திற்கு ஆளாக்க உய்யும் வகை இது நெஞ்சமே எந்த குறுக்கு வழியும் கிடையாது நீ உய்வடைய வேண்டும் என்று சொன்னால் இந்த மும்மலங்களையும் ஆணவம் கண்மம் மாயை என்ற மும்மலங்களையும் நீக்கி உன்னை இறைவனிடம் சரணாகதி ஆக்க வேண்டும் என்று சொல்றதை நம்ம பார்க்கிறோம் சமரச சுத்த சன்மார்க்கம் அப்படின்னா இதை பத்தி பேசுறாங்க இல்லையா அது போர்த் பாயிண்ட் வந்துட்டேன் வள்ளல் பெருமான் மதங்கள் குறித்து தமது புரிதலை இவ்வாறு பதிவு செய்கிறார்
எம்மத நிலையும் நின் அருள் நிலையில் இளங்குதல் அறிந்தனன் எல்லாம் சம்மதமாக்கிக் கொள்ளுகின்றேன்
எல்லாமே எல்லா மதங்களும் ஏதோ ஒரு சக்தி இருக்கு அந்த சக்தியினுடைய அடிப்படையில் தான் இவை இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நான் புரிந்திருக்கிறேன் அதனால எல்லாத்தையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்லுகிறார் அழகர் அடிகள் பழனி ஆதீனம் அவர்கள் வள்ளலாரை பத்தி சொல்லும்போது சொல்றாரு சன்மார்க்கம் குறித்து வள்ளலார் என்ன சொல்லி இருக்காருன்னு சொன்னா எல்லா சமயங்களுக்கும் பொதுவாகிய ஞான மார்க்கத்தை அனுஷ்டிக்கிற கூட்டம் அப்படின்னு சொல்லி சொல்றார் தோத்திரத்துக்கு திருவாசகத்தை எடுத்துக்கிட்டாரு சாஸ்திரத்துக்கு திருமந்திரத்தை எடுத்துக்கிட்டார் மந்திரத்துல பார்த்தீங்கன்னு சொன்னா நாலு சாதனம் நாலு மார்க்கம் நாலு பயன் நாலு முக்தி இதை பத்தி பேசுறாங்க ஆக 12 அதிகாரங்கள்ல இது ஒவ்வொன்றையும் மிகத் தெளிவாக இவர் விளக்கிட்டு போறத நம்ம பார்க்கிறோம் சரியை கிரியை யோகம் ஞானம் அப்படின்னு நாலு இருக்கு இல்லையா இந்த சரியைன்னா என்ன அப்படின்னு சொன்னோம்னா உடம்பால இப்ப ஒரு ஆரத்தி எடுக்கிறோம் பூ போடுறோம் இதெல்லாமே வந்து உடம்பால செய்கின்ற வழிபாடு அடுத்தது நம்முடைய உடம்பாலும் மனதாலும் செய்கின்றது தான் கிரியைன்னு சொல்றாங்க யோகம்னு சொன்னா நம்ம செய்யற ஹத யோகாஸ் எல்லாம் யோகம் இல்ல இவங்க என்ன சொல்றாங்க யோகம் என்பது மனதால் வழிபடுவது அப்படின்னு சொல்றாங்க ஞானம் அப்படின்னு சொன்னா இறைவனோடு இரண்டற கலந்து விடுகிற இந்த நிலைதான் ஞானம் என்கிறார் இந்த ஞான நிலையை இவர் எடுத்துக்கொண்டார் அதாவது இப்போ மார்க்கம் அப்படிங்கறது தாசமார்க்கம் சத்புத்திர மார்க்கம் சக மார்க்கம் சன்மார்க்கம் இந்த சன்மார்க்கத்தை இவர் எடுத்துக்கிட்டார் இவர் சொல்லும்பொழுது என்ன சொல்றாரு இந்த நான்கையும் எல்லா உயிர்களிடத்திலேயும் நம்ம காட்டணும் வேண்டும் இதுக்கு என்ன பேருன்னு சொன்னா ஜீவ நியாயம் அப்படிங்கறதுதான் பேரு சன்மார்க்கத்தினுடைய சுருக்கம் அப்படின்னு சொன்னா நான் அந்த பத்து பாயிண்ட்ஸ் அதெல்லாம் நான் சொல்லப்போறதில்லை சுருக்கமா என்ன சொல்லணும்னு சொன்னா கடவுள் ஒருவர்தான் எல்லாரையும் எல்லா உயிர்களையும் நீ வந்து உன்னைப்போல நீ அன்பு செய்ய வேண்டும் அப்படின்னு சொல்றார் உயிர் குலம் தான் கடவுள் வாழுகின்ற ஆலயம் எனவே உயிர் குலத்திற்கு நீ தொண்டு செய்ய வேண்டும் இது மூன்று தான் இதுல இதுக்குள்ள அடங்கி இருக்கும் நீங்க பார்த்தீங்கன்னு சொன்னா
நாமக்கல் கவிஞர் இவர் ஒரு காந்திய கவிஞர் ரொம்ப அழகா ஒரு பாட்டு இதை ஸ்கூல்ல பாடிட்டு இருந்தாங்க எனக்கு ரொம்ப புடிச்சிச்சு அதனால சொல்லணும்னு ஆசைப்பட்டேன்
அல்லாஹ் என்பார் சில பேர்கள் அரநறி என்பார் சில பேர்கள் வல்லார் அவன் பரமண்டலத்துள் வாழும் தந்தை என்பார்கள் சொல்லால் விளங்கா நிர்வாணம் என்றும் சில பேர் சொல்வார்கள் எல்லாம் இப்படி பலர் பேசும் ஏதோ ஒரு பொருள் இருக்குதன்றோ அந்தப் பொருளை நாம் நினைத்தே அனைவரும் அன்பாய் குலைவிடுவோம் எந்த படியாய் எவர் அதனை எப்படி தொழுதால் நமக்கென்ன நிந்தை பிறரை பேசாமல் நினைவிலும் கெடுதல் செய்யாமல் வந்திப்போம் அதை வணங்கிடுவோம் வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்
அப்படின்னு சொல்றார் ரொம்ப அருமையான ஒரு கவிதையா இருந்தது சர்வ சமய கீர்த்தனைகள் வேதநாயகம் பிள்ளையோடது இவர் வந்து கிறிஸ்தவ சமய வழிகாட்டலின் படி மூன்று விஷயம் இவரும் சொல்றார் கடவுள் ஒருவர்தான் உன்னை நீ அன்பு செய்வது போல உன் அயலானையும் நீ மற்ற உயிர்களையும் அன்பு செய்ய வேண்டும் அடுத்தது இந்த இந்த உடல் என்பது கடவுள் வாழுகின்ற ஆலயம் எப்படி உன்னை நீ பேணுகிறாயோ அப்படியே அடுத்தவருக்கும் நீ பேண வேண்டும் அடுத்தவருக்கும் நீ உதவி செய்ய வேண்டும் என்பதை சொல்றதை இப்ப பார்க்கிறோம் இவர் இந்த சர்வ சமய கீர்த்தனையை வந்து வள்ளலார் கிட்ட கொண்டு போய் அரங்கேற்றம் பண்ணதாக இந்த ஊரன் நடிகள் அவருடைய புத்தகத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறார் நம்ம பார்க்கிறோம் இது கர்ண பரம்பரையாகவும் சொல்லப்பட்டிருக்கிறது அப்போ கேவி சீனிவாச ஐயங்கார் இயற்றிய தமது சங்கீத சில்லறை கோவையிலே இதைப்பற்றி குறிப்பிட்டிருப்பதாக ஊர மென்ஷன் பண்ணி இருக்கார் இதுல 200 பாடல்கள் தான் இருக்கு இறைவனைப் பற்றியவை உபதேச கீர்த்தனை உத்தியோக சம்பந்தப்பட்ட கீர்த்தனைகள் குடும்ப சம்பந்தமான கீர்த்தனை தன்னுடைய மகளுக்கு அறிவுரை சொல்ற மாதிரி எல்லாம் இருக்கு
அடித்தாலும் வைத்தாலும் அவரே துணையல்லால் ஆர் துணையடி மானே அடித்தாலும் வைலும் அவரே துணையல்லால் ஆர் துணையடி மானே மடித்தாலும் அவருடன் வாய்மதம் மிஞ்சலாமோ மடித்தாலும் அவருடன் வாய்மதம் மிஞ்சலாமோ வானத்தின் கீழிருந்து மழையிடிக்கு அஞ்சலாமோ அடித்தாலும்
சொல்றது அதெல்லாம் மகளுக்கு சொல்றது போல ரொம்ப நல்லா எழுதி இருக்காரு சொர்க்க வாசல்ல தொண்டைமானும் தோட்டியும் ஒன்னாதான் நீ முடியும் அப்படிங்கறத அவர் பதிவு செய்றாரு அடுத்தது மனித நேயத்தை நான் விட்டுட்டேனே உடம்பை எரித்து அப்ப வள்ளலாருடைய தாக்கம் இவர்கிட்ட இருந்ததை நம்ம பார்க்கிறோம் அப்புறம் வந்து பொன்விதி அப்படின்றது ஒரு வேத ஆகமத்துல எங்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது அதுல என்ன சொல்றாங்கன்னு சொன்னா உனக்கு நீ என்னென்ன செய்யணும் மத்தவங்க உனக்கு என்னென்ன செய்யணும்னு நீ விரும்புறியோ அது எல்லாத்தையும் நீ மத்தவங்களுக்கு செய்யணும் இதுதான் பொன்விதி இது தனக்கு இருக்க வேண்டும் என்று அவர் வாழ்ந்திருக்கிறதை நம்ம பார்க்கிறோம் ரொம்ப வேகமா சொல்றேன் திருச்சியில தாயுமானவர் கோயில் இருந்தது அங்க வந்து கட்டளை தம்புரான் அப்படின்னு வந்து இருந்தாரு அவரு மத்தவங்க சொல் பேச்சு கேட்டுட்டு ஏதோ அவங்களுக்குள்ள அந்த தர்மபுரம் ஆதீனத்தினுடைய கீழ் இவரு வேலை செய்யும்போது ஏதோ ஒரு தவறு நடந்துருச்சு இதை வந்து கேஸ் போட்டுருந்தாங்க அப்ப இவர் வந்து கிறிஸ்டியன்ஸ் எல்லாம் கொஞ்சம் பேர் சேர்ந்துட்டு போயி நீங்க வந்து இந்த கட்டளை தம்பிரானுக்கு ஹெல்ப் பண்ணனும் அப்படின்னு போய் கேக்குறாங்க ஆனா இவரு நீதிக்காக இருந்திருக்கார் வேதநாயகம் பிள்ளை அப்போ வந்து ஆங்கிலத்தில் தான் கடிதம் எழுதணும் இவர்கிட்ட வந்து கேட்டு அவர் ஒரு கடிதம் எழுதி இவங்க தர்மபுர ஆதீனம் தான் இந்த கேஸ்ல வெற்றி அடைஞ்சதை நம்ம பார்க்கிறோம் அப்போ இந்த இடத்துல அவரு மதத்தையோ தனக்கு வேண்டியவர்கள் என்பதையோ அவர் பார்க்கலங்கிறது தெரியுது அதேபோல திருவாடுதுறை ஆதீனம் இருக்காரு இல்லையா அவரை நான் ரொம்ப ரொம்ப ரெண்டு பேரையும் இவங்களுடைய அந்த கான்வர்சேஷன் எல்லாம் படிக்கும்போது உண்மையாவே ரொம்ப சந்தோஷமா இருக்கும் இப்படி எல்லாம் ஒருத்தரை அன்பு செய்ய முடியுமா ஏன்னா அவங்க வந்து திருக்குடரா வழி மரபுல வந்தவர் அவருக்கும் தமிழ் மேல ஆர்வம் பாட்டுலயும் ரொம்ப ஒரு இன்பம் இருந்ததை நம்ம பார்க்கிறோம் அப்ப இவர் சொல்றாரு யாரு இவருதான் பாக்கணும்னு ஆசைப்பட்டு சொல்லி அனுப்புறாரு நம்ம மீனாட்சி சுந்தரம் பிள்ளைகிட்ட அவர் சொல்றாரு இதுக்கு பதில் ஒரு பாட்டு எழுதி அனுப்புறாரு என்னன்னு சொன்னா பாட்டெல்லாம் நான் படிக்கல டைம் ஆயிடும்னு அப்போ இவர் சொல்றாரு எனக்கு நீங்க கொடுத்ததே 8:20க்கு தான் கொடுத்தீங்க அதனால 9:20 வரைக்கும் எனக்கு டைம் இருக்கு அப்போ நான் வாயே அப்ப வந்து அவர் சொல்றாரு சரி தேங்க்யூ தேங்க்யூ சார் அப்போ இவர் சொல்றாரு நீ வந்து என்னுடைய மனசுல இல்ல நீ குடியிருந்துட்டு இருக்க ஏன் இவர் வந்து இந்த மாபுலவன் எப்படி பொய் சொல்ல முடிஞ்சுச்சு இவர் வந்து நீங்க வந்து திருவாடுதுறையில இருக்கிறதாக சொல்றாங்க அப்படின்னு ஒரு பாட்டு எழுதி அனுப்புறாரு சரி அப்புறம் இவங்க வந்து சந்திக்கிற நேரம் காலெல்லாம் குறிப்பிட்டு அனுப்புறாங்க எங்க மாயவரத்துல ஒரு இதுல சந்திப்போம் அப்ப எந்த நேரத்துல சைவ மடாலயத்துல சந்திப்போம் எந்த நேரம் அப்படின்னு சொன்னா அன்னைக்கு கிரகண காலம் அதுவும் அமாவாசை அப்ப எப்படி இருக்கும் இருட்டா இருக்கும் உடனே இவர் பாட்டு எழுதி அனுப்புறாரு
குருவும் கிரகணமும் கூடலால் ரொம்ப கும்மி இருட்டா இருக்கும் ஆனா சுப்பிரமணியா நீ வந்து ஒரு சூரியன் அல்லவா நீ வரும்போது அந்த இருட்டு என்னை எப்படி பாதிக்கும்
அப்படின்னு சொல்லி இவர் பதிலுக்கு பாட்டு எழுதி அனுப்புறார் இவங்களை ரொம்ப அடிக்கடி இப்படி சந்திச்சு சந்திச்சு இவர்களுக்குள்ள ஒரு அன்பு மலர்ந்து ஒருத்தர் ஒருத்தர் அடிக்கடி சந்திக்கணும்ங்கிற நிலைக்கு இருந்தாங்க இவர் வந்துட்டு சொல்றாரு என் வண்டி முன்னாடி போகுது என் மனசு பின்னாடி தான் போகுது அப்படின்னு ஒரு பாட்டு எழுதி இருக்காரு அதை சொல்லிட்டு நான் வீட்டுக்கு வந்துட்டேன் சூர் வந்து வணங்கும் மேன்மை சுப்பிரமணிய தேவை இந்த பாட்டு உங்களுக்கே தெரியும் இவரும் மனப்பாடமா சொல்லுவாரு நேர் வந்து நின்னைக் கண்டு நேத்து ராத்திரியே மீண்டும் வீட்டுக்கு வந்துட்டேன் ஆனா என் உளம் வந்து சேர காணாமே அப்படின்னு சொல்றாரு அப்ப இவர் மட்டும்தான் பாட்டு எழுதி அனுப்பினாரா அப்படின்னு நான் தேடுனேன் தேடும்போது இது ஒருதலை காதலோ அப்படின்னு நினைக்கும்போது இல்ல அவருக்கும் இவர் மேல ரொம்ப பிரியம் இருந்திருக்கு அவர் சொல்றாரு
குமுத மலர் சந்திரனையே நோக்கும் சமய குறவர் மனம் ஞான நூலையே நோக்கும்
அதுபோல போல வேதநாயகா தங்களையே பற்றி நிற்கிறது என் மனம்
அப்படின்னு சொல்லி இவர் அழகா எழுதுறார்
இந்து வினை நோக்கும் எழில் கைரவம் கைரவம்னா குமுதமலர் ஏக தந்து வினை நோக்கும் சமையி மனம் முந்துலகில் நன்மையும் நீதி நல வேத நாயகமால் உந்தனையே நோக்கும் உளம் அப்படின்னு சொல்லி சொல்றார் இப்போ அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள் அப்படின்னு சொல்லி நம்ப அறநூலார் தெய்வப்புலவர் சொல்றது போல இந்த இடத்துல எல்லாமே தகர்ந்து போயிருச்சு இனம் மதம் வகிக்கின்ற பதவி அவங்களுடைய பொருளாதார நிலை எல்லாத்தையும் தகர்த்துட்டு இந்த ஆன்மீகமும் உயர்நிலை ஆன்மீகமும் தமிழும் இசையும் இவர்களை ஒன்றாக இணைத்திருந்தது அப்படின்னு சொல்றதை நம்மளால மறுக்கவே முடியாது சரிங்களா அடுத்தது ஐந்தாவது பாயிண்ட்டுக்கு வந்துட்டேன் வள்ளலார் ஒரு சமுதாய சீர்திருத்தவாதி நம்முடைய சித்தாந்த கலாநிதி திரு அவ்வை துரைசாமி பிள்ளை அவர்கள் வள்ளலாரை பற்றி சொல்லும்போது சொல்றாரு வள்ளலாரை பொறுத்தவரை கடவுள் வழிபாடு என்பது உண்டியும் மருந்தும் அளித்தும் உதவும் உயிர் வழிபாடு அப்படின்னு சொல்றார் அது பொருத்தமான ஒன்று அவர் இருக்கும்போது அதெல்லாம் செஞ்சாரு ஒரு மூன்று வருஷம் பஞ்சம் இருந்துச்சு அந்த பஞ்சத்துல மக்கள் பாடுனதை நம்ம ஒரே ஒரு லைன் மட்டும் சொல்லுவோம் பொதுவா சொல்லுவேன் யாதும் ஒரே யாவரும் கேளீர்னு அந்த ஒரு லைன் மட்டும் சொல்ற மாதிரி அதுக்கு பின்னாடி இருக்கிற அந்த லைன் எல்லாமே ரொம்ப ரொம்ப முக்கியமான வரிகள் தான் ரொம்ப அழகா சொல்லணும் தீதும் நன்றும் பிறர் தர வாரா அப்படின்னு சொல்றதெல்லாம் ரொம்ப அழகா இருக்கும் அதெல்லாம் விட்டுடுவோம் அதேபோல இவர்லயும்
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்
அப்படின்னு மட்டும் சொல்லி நிறுத்திடுவோம் அதுக்கப்புறம் சொல்றாரு
வாடினேன் பசியினால் இளைத்தே வீடுதோறும் இறந்தும் பசியறாது அயர்ந்த வெற்றாரைக் கண்டு உளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேருக் கண்டு உளம் துடித்தேன் ஈடில் மாணிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர் தம்மைக் கண்டே இழைத்தேன்
அப்படின்னு சொல்றாரு அப்போ அதனால சும்மா இழைத்தேன்னு ஒரு பாட்டு மட்டும் எழுதிட்டா அவர் சும்மா சும்மா இல்லை சத்திய தர்மசாலை என்பதை ஒன்றை நிறுவினார்
இன்ன வரைக்கும் அது அணையாத நெருப்பா எறிஞ்சிட்டு எல்லாருக்கும் நீங்க எந்த நேரத்துல போனாலும் உங்களுக்கு பசியாறுவதற்கு தேவையான உணவை அளிக்கக்கூடிய ஒரு தர்மசாலையாக அது திகழ்ந்து கொண்டிருக்கிறது
அஷ்டமா சித்திகள் எல்லாம் தெரியும் அதுமட்டும் இல்ல ரசவாதம் தெரிஞ்சதுனால உதவுனதாக அவருடைய சரித்திரத்தில் நம்ம படிக்கிறோம் அவருக்கு வந்து சித்த மருத்துவம் தெரியும் அதனால அவர் வந்து மருந்து குண அட்டவணை என்ற ஒரு நூலை எழுதி இருக்காரு நிறைய பேருக்கு மருந்துகள் கொடுத்து அவருடைய உயிரை காப்பாற்றி இருக்கிறதை நம்ம பார்க்கிறோம் வேதநாயகருக்கு என்ன அப்படி சமுதாய அக்கறை இருந்தது அப்படின்னு பார்க்கும்போது இவர் வந்து அரசாங்க உத்தியோகம் நிறைய கை நிறைய சம்பளம் இருந்துச்சு மொழி அறிவு இருந்துச்சு நீதிபதியா இருந்தாரு இருந்தாலும் கூட யார் யாரெல்லாம் ஏழைகளோ அவர்களை தேடிப்போய் உதவினார் யார் யாருக்கெல்லாம் உண்மையாக நீதி கிடைக்க வேண்டுமோ அவர்களுக்கெல்லாம் அது கிடைக்க வேண்டும் என்று பார்த்துக் கொண்டார் அதுமட்டும் இல்ல அவரைப் போலவே நம்ம வள்ளலாரை போலவே அவரும் அந்த பஞ்சகாலத்துல இருந்திருக்காரு அவரும் சொல்றாரு எட்டு நாள் பத்து நாள் பட்டினியோடே இடையிலே கந்தல் இருக்கையில இரு கையில் ஓடே அப்படியெல்லாம் இருந்து ஊர் இல்லாம இருந்தவங்களுக்கு எல்லாம் இவரு கொஞ்சம் குடிசை போட்டு வீடு கட்டி கொடுத்திருக்காரு அது மட்டும் இல்லாம பல இடங்கள்ல கஞ்சி தொட்டி அமைச்சு கொடுத்தார் அந்த நேரத்துல அவரும் தன்னுடைய சொந்த பணத்திலிருந்து அரசாங்கத்திலிருந்து கிடைத்த பணமா இருந்தாலும் கூட தன்னுடைய சொந்த பணத்தையும் இதற்காக பயன்படுத்தி ஏழைகளுக்கு உணவளித்தது நமக்கு பார்க்கிறோம் காலரா வந்து அப்ப நிறைய பேர் செத்துப் போயிட்டாங்க அப்ப சொல்லுவாங்க இலக்கணத்துல மெய்யெழுத்துக்கு அரை மாத்திரை இல்லையா அப்ப இந்த உடம்புக்கு மெய்ன்னு பேரு இந்த மெய்க்கு அரை மாத்திரை அளவு அதாவது பாதி மாத்திரை கூட கிடைக்காம நிறைய பேர் செத்துப் போயிட்டாங்க அப்படின்னு சொல்லி ஒரு கவிதை எழுதி நம்ம ஆதீனத்துக்கு கொடுத்து அனுப்புறார் நீங்க தான் நீங்க வந்து உயிர் காக்கிற தெய்வம் அதனால உங்களால இதை செய்ய முடியும் மும்மல நோய் கெட வித்தகன் நீ அந்த நோய்களை அறுக்கக் கூடியவன் அதனால நீ எனக்கு உதவி செய்யணும் ஏன்னா அந்த நேரத்துல இவருக்கு அரசாங்கம் உதவி செய்திருக்கிறது இருந்தாலும் கூட அந்த நேரத்தில் போதாமை இருந்ததுனால இவரும் நம்முடைய ஆதீனமும் அவர்களும் அவருக்கு பணம் கொடுத்து உதவி செய்து மாத்திரைகள் கொடுத்து அந்த உயிர்களை காப்பாத்துறதுக்கு உதவி இருக்கிறார்
கோபாலகிருஷ்ண பாரதி ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கார் அவருக்கு வந்து ஆதரவு கொடுக்கல சில காரணங்களுக்காக அதெல்லாம் நான் சொல்ல விரும்பல ஆனா வந்து இவர் தன்னுடைய வீட்டிலே ஏற்றுக்கொண்டு இறுதிவரை தான் அவர் சாகும் வரை அவர் வந்து அவரை வச்சு காப்பாத்துனதுக்காக பதிவு இருக்கு நமக்கு நான் நானாவே இதை சொல்லல அதேபோல மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களுடைய மகன் அவர் இறந்ததுக்கு அப்புறம் இவர் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காரு அதை பார்த்துட்டு இவர் சும்மா இல்லை இவர் உடனே ஒரு பாட்டு எழுதி அனுப்புறார் பாவி பெரியவன் மீனாட்சி சுந்தர பாவலனே அப்படி எல்லாம் சொல்லி ஒரு பாட்டு எழுதி இந்த மாதிரி அவன் கஷ்டப்படுறான் நீங்க அவர் கட்டாயமா உதவி செய்து ஆகணும் அப்படின்னு சொல்லி கேட்கிறார் அந்த மாதிரி உதவிகளை இவர் பெற்றுக் கொடுத்ததை நம்ம பார்க்கிறோம் கஞ்சி தூட்டி அமைச்சு கொடுத்திருக்காரு மாத்திரை வாங்கி கொடுத்திருக்காரு இருக்காரு நீதி மற்றவர்களுக்கு ஏழைகளுக்கு கிடைக்கணும்ன்றதை அவர் பார்த்திருக்கிறார் முடிவாக இருவேறு சமயத்தைச் சார்ந்த ரெண்டு பேரும் ஞானம் அப்படிங்கிற ஒன்று கைவரப்பெற்றதால் தன்னுடைய பிறவியினுடைய பொருளை உணர்ந்து அறத்தை முழுமையாக வாழ்ந்திருக்கிறார்கள் இல்லறமாகட்டும் துறவரம் ஆகட்டும் முழுமையாக முறையாக வாழ்ந்து உலகம் உய்வடைய வேண்டும் என்று விரும்பி இருக்கிறதை பார்க்கிறோம் பொதுவா நம்ம சில நூல்கள் எழுதுவோம் பாடல்கள் எழுதுவோம் எத்தனையோ காலம் கடந்து ஒரு பத்து வருஷத்துக்கு அப்புறமே அந்த நூல் இல்லாம போயிடும் அதை பத்தி யாரும் பேசமாட்டாங்க ஆனா சில நூல்கள் காலம் கடந்து இருக்குது அப்படின்னு சொன்னா காலம் அதனை காப்பாற்றி நமது கையில் கொடுத்திருக்கிறது இன்னைக்கு காலையில பாடும்போது கூட பார்க்கும்போது அவருடைய பாடல்களை பார்த்தீங்கன்னா அவரு இயேசு பெருமான் அப்படி எல்லாம் எந்த சொன்னதே கிடையாது பொதுவான தெய்வத்திற்கு
கருணாலய நிதியே அப்படின்னு சொன்னாங்க இல்லையா அது மாதிரி
ஆதியே பரஞ்ஜோதியே அப்படி என்ற பொதுவான ஒரு பெயர்களை கொடுத்து தான் அவர் வந்து பாடலாம் பாடி இருக்கிறதை பார்க்கிறோம் தன்னுடைய மனம் தன்னுடைய இனம் தனக்கு எனக்கு எல்லாம் இருக்கு பதவி இருக்கு பணம் இருக்கு அப்படிங்கறதெல்லாம் எந்த நிலையிலுமே அவர் காண்பிக்கவில்லை அவர் ஒரு அவதார புருஷன் என்றாலும் கூட இவர் சாதாரண மனிதனாக இருந்து இந்த ஒரு நிலைக்கு ஏற்பட்டு இன்னைக்கு பல இடங்களில் நானும் பார்த்திருக்கேன் அரிமளம் பத்மநாபன் சாரே சொல்லி இருக்காரு அவர் வேதநாயகம் பிள்ளையுடைய பாட்டுனே தெரியாம எங்க அப்பா எல்லாம் நான் அவருடைய பாடல்களை தான் நாங்க இறைவணக்க பாடல்களா நிறைய இடத்துல பாடி இருக்கோம் அப்படின்னு சொல்றாங்க இப்ப நாமளும் கச்சேரிகள்ல நிறைய இடத்துல இந்த பாடல்களை எடுத்து பாடுறதை கேட்கிறோம் ஏன்னா அது பொதுவாக சரியான விஷயங்களை நமக்கு தரக்கூடிய ஒன்றாக இருக்கிறதை நாம பார்க்கிறோம்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுரையும் தெய்வத்துள் வைக்கப்படும்
அது மாதிரி நம்மளும் பலபேர் இருக்கோம் இன்னைக்கு வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இந்த இதெல்லாம் நிலைகள் எல்லாம் கடந்து அன்பு காட்டுகின்ற ஒரு நிலை அருளோடு வாழுகின்ற ஒரு நிலை இப்படி எல்லாம் இருக்கிறதை நம்ம பார்க்கிறோம் இந்த நிலையில இவங்க ரெண்டு பேருடைய பாடல்களையும் நம்ம நம்ம பார்க்கும் பொழுது எங்களுடைய சிஸ்டர்ஸே வந்து வேதனை எங்க பிள்ளை கிறிஸ்தவரா அப்படின்னு சொல்லி கேட்டாங்க எனக்கு வெட்கமா இருந்தது உண்மையாவே அப்போ எத்தனையோ பேருக்கு தெரியாது நிறைய விஷயங்கள் தெரியாம இருக்கு நம்ம படிச்சுக்க வேண்டியது அதான் கற்றது கைமண் அளவு கல்லாதது உலக அளவுன்னு சும்மா சொல்லல நம்ம பாட்டி அப்போ தெரிஞ்சுக்கிறதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு இந்த மாதிரி எல்லாம் கடந்து வாழ்ந்த மனிதர்களைப் பற்றி தெரிந்து கொள்வதும் அவர்களைப் போற்றுவதும் அவர்கள் விட்டுச் சென்ற விழுமியங்களை வாழ்வாக்குவதும் நமக்கு தேவையாக இருக்கிறது
.........